உதவியாளரின் கள்ளப்படத்தில் மிஷ்கின்.

பிரபல இயக்குனர் மிஷ்கின் அடுத்த படத்திற்கு தயாராகி கொண்டு இருக்கும் நிலையில் தனது உதவியாளர் இயக்கும் ஒரு படத்தில் ஒரு பாடலை பாடி அந்த பாடலுக்கு நடனமும் ஆடுகிறார்.

மிஷ்கினின் உதவியாளர் ஜெ.வடிவேல் இயக்கும் படத்தின் பெயர் ‘கள்ளப்படம்’. இந்த படத்தில் நடிகை லட்சுமிராய் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்துக்காக மிஷ்கின் ஒரு பாடலை பாடியுள்ளார். ‘வெள்ளக்கார ராணி’ என்று தொடங்கும் அந்த பாடலை பாடியதோடு அல்லாமல் அந்த பாட்டிற்கு நடனம் ஆடவும் ஒப்புக்கொண்டுள்ளார் மிஷ்கின். இந்த படத்திர்கு ‘கே’ இசையமைப்பாளராக பணிபுரிகிறார். இந்த படத்திற்காக ‘கே’ ஆறு பாடல்களை கம்போஸ் செய்துள்ளார். இவர் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமின் உதவியாளர் ஸ்ரீராம சந்தோஷ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழர்களின் பாரம்பரிய நிகழ்ச்சியான ‘கூத்து’ பற்றிய கதையம்சம் கொண்ட இந்த படம், வரும் ஏப்ரல் அல்லது மே ம்ஆதம் ரிலீஸ் ஆகிறது.

Leave a Reply