2015ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்தியா உள்பட 88 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.
உடை அலங்காரம், அறிவுத்திறன், உடல் அழகு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டி நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மிகச்சிறப்பாக அனைத்து பிரிவுகளிலும் தனது திறமையை நிரூபித்த கொலம்பியா நாட்டை சேர்ந்த ‘பவுலினா வேகா’ மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார். இவருக்கு கடந்த ஆண்டு பட்டம் வென்ற வெனிசுலா அழகி காபிரியலா இஸ்லர் கிரீடம் அணிவித்து சிறப்பித்தார்.
22 வயதாகும் வேகா தொழில் நிர்வாகம் படித்து வரும் கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. வேகா பங்குகொள்ளும் முதல் சர்வதேச போட்டியிலேயே அழகி பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டம் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த இந்த விழாவில் அமெரிக்காவைச் சேர்ந்த நியா சாஞ்செஸ், உக்ரைனைச் சேர்ந்த டயானா ஹெர்குஸ் ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர். 1958 ஆம் ஆண்டுக்கு பின் உலக அழகி பட்டம் வெல்லும் கொலம்பிய பெண் என்ற பெருமையை வேகா பெற்றுள்ளார்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1CtrtxD” standard=”http://www.youtube.com/v/aZ5ByJ0pdG8?fs=1″ vars=”ytid=aZ5ByJ0pdG8&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep2398″ /]