மாதர் சங்கத்தின் எதிர்ப்பால் தென்னிந்திய அழகி போட்டி ரத்து

கோவையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்றுமாலை நடப்பதாக இருந்த தென்னிந்திய அழகிப்போட்டி மாதர் சங்கத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை அவினாசிசாலையில் உள்ள லீமெரிடியன் நட்சத்திர ஓட்டலில் கேரளாவை சேர்ந்த பெதர்ஸ் என்ற நிறுவனம் நேற்று மாலை தென்னிந்திய அழகிப்போட்டி ஒன்றை நடத்த பிரமாண்டமான ஏற்பாடு செய்திருந்தது.  இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து அழகிகள் பங்குபெறுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. வெற்றிபெரும் அழகிகளுக்கு ரொக்கப்பரிசும், முடிசூட்டு விழாவும் நடத்த அனுமதி பெறப்பட்டிருந்தது.

இந்நிலையில் அழகிபோட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை கோவையை சேர்ந்த மாதர்சங்கத்தினர் நூற்றுக்கணக்கின் ஓட்டலின் முன்குவிந்து போராட்டம் நடத்தினர். அத்துமீறி உள்ளே நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் லீமெரிடியன் ஓட்டல் மேலாளர் ராமச்சந்திரன் மாதர்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

மாதர் சங்கத்தின் வேண்டுகோள் ஏற்கப்பட்டு ஓட்டலில் அழகிப்போட்டி நடத்துவதற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்வதாகவும், அந்தநிறுவனமும் நிகழ்ச்சியை ரத்து செய்ய ஒப்புக்கொண்டதாகவும் மேலாளர் கூறியதை தொடர்ந்து மாதர்சங்கத்தின் பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக கோவையில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply