மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற 26 வயது ஹாலிவுட் நடிகை

26 வயது ஹாலிவுட் நடிகை மிஸ் அமெரிக்கா பட்டம் வென்றார்

[carousel ids=”68121,68122,68123,68124,68125,68126,68127″]

அமெரிக்க இளம்பெண்களின் கனவுகளில் ஒன்று மிஸ்.அமெரிக்கா பட்டத்தை பெறுவது. இவ்வருட மிஸ் அமெரிக்கா படத்தை ஹாலிவுட் நடிகை ஒலிவியா ஜோர்டான் என்பவர் பெற்றுள்ளார்.

26வயதான ஒலிவியா, ஹாலிவுட்டில் ஒருசில படங்களில் நடித்துள்ளார். மேலும் இந்தோனேசியாவின் கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் பங்கேற்று 20வது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ‘மிஸ் ஓக்லஹாமா’ என்ற பட்டத்தையும் வென்றார்.

தற்போது ‘மிஸ் அமெரிக்கா’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு, முடிசூட்டப்பட்டுள்ள ஒலிவியா ஜோர்டான், விரைவில் நடைபெறவுள்ள மிஸ்.யுனிவர்ஸ் போட்டியிலும் அமெரிக்கா சார்பில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியை நடத்திய டோனால்ட் டிரம்ப் என்பவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆதரவு திரட்டிவருகிறார். தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது டோனால்ட் மெக்ஸிக்கோவில் இருந்து வரும் நபர்களால் அமெரிக்காவில் குற்றங்கள் பெருகி வருவதாக அவர் குறிப்பிட்டிருந்ததால், இந்த போட்டியை ஒளிபரப்ப பல அமெரிக்க ஊடகங்கள் மறுத்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply