‘மிஸ் அமெரிக்க அழகி’ போட்டியில் இளம் விஞ்ஞானி வெற்றி
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் ‘மிஸ் அமெரிக்க அழகி’ தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான அமெரிக்க அழகியாக 25 வயது இளம் விஞ்ஞானி தேர்வு பெற்றுள்ளார். அவருக்கு அமெரிக்கா முழுவதிலும் இருந்து பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது
‘மிஸ் அமெரிக்க அழகியின் இறுதிப்போட்டிக்கு 3 பேர் தகுதி பெற்றிருந்தனர். வாஷிங்டன் மாகாணத்தின் கொலம்பியா மாவட்டத்தை சேர்ந்த காரா மெக்கல்லோ, நியூஜெர்ஸி மாகாணத்தை சேர்ந்த சாவ்வி வெர்ஜ் மற்றும் மினசோட்டா மாகாணத்தை சேர்ந்த மெரிடித் கோல்ட் ஆகியோர் இறுதி போட்டிக்கு தேர்வு பெற்றனர். இவர்களில் நடுவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு காரா மெக்கல்லோ சாதூர்யமாக பதிலளித்ததால் அவர் ‘மிஸ் அமெரிக்க அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
மிஸ் அமெரிக்க அழகி போட்டியில் வென்றவுடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காரா மெக்கல்லோ, ‘பெண்களாகிய நாங்கள் ஆண்களுக்கு சமமானவர்கள், குறிப்பாக வேலைபார்க்கிற இடங்களில் சமமானவர்கள். ஆனால் அதே நேரத்தில் நான் ஒரு பெண்ணியவாதி இல்லை என்று கூறினார்.
அமெரிக்க அழகியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் காரா மெக்கல்லோ இந்த ஆண்டு நடைபெறும் பிரபஞ்ச அழகி போட்டியில் அமெரிக்காவின் சார்பில் பங்கேற்பார்.