ஆராய்ச்சி கப்பல் வருவதில் தாமதம். விமானத்தை மீட்கும் பணியில் சிக்கல்

ஆராய்ச்சி கப்பல் வருவதில் தாமதம். விமானத்தை மீட்கும் பணியில் சிக்கல்

sagarசென்னை தாம்பரத்தில் இருந்து கடந்த வெள்ளியன்று கிளம்பிய ஏ.என்32 ரக விமானம் திடீரென மாயமாகி ஒருவாரம் ஆகியபோதிலும் விமானம் குறித்து எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் மாயமான விமானத்தை தேடுவதற்கு ஆராய்ச்சிக் கப்பல் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளளதால் தேடுதல் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

வங்காள விரிகுடா பகுதியில் சுமார் 3,500 மீட்டரில் இருந்து 5 ஆயிரம் மீட்டர் வரை ஆழம் உள்ள பகுதியில் விமானம் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாக மத்திய அரசின் தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்துக்குச் சொந்தமான ஆராய்ச்சிக் கப்பல் சாகர்நிதியை, விமான மீட்பு பணியில் ஈடுபடுத்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இந்த கப்பலில் பொருத்தப்பட்டிருக்கும் “எக்கோ சவுண்டர்’ என்ற கருவியின் மூலம் கடலில் 6,000 மீட்டர் வரையுள்ள பொருள்களைக் கண்டறிய முடியும் என்பதால், இந்தக் கப்பல் மூலம் விமானத்தை எளிதில் மீட்டுவிடலாம் என கூறப்பட்ட நிலையில் இந்தக் கப்பல் நேற்று வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஏற்கனவே மொரீஷியஸ் நாட்டிற்கு ஒரு ஆராய்ச்சிக்காக சென்றிருந்த அந்தக் கப்பல் மோசமான வானிலை காரணமாக எதிர்பார்த்த வேகத்தில் பயணிக்க முடியவில்லை. இதனால் அந்தக் கப்பல் ஆகஸ்ட் 1 அல்லது 2- ஆம் தேதிதான் சென்னை வந்து சேரும் என்றும் அதன் பின்னரே தேடுதல் பணி தொடரும் என்றும் தெரிகிறது. இந்நிலையில் அதுவரை காத்திருக்காமல் தனியாருக்கு சொந்தமான கப்பலை தேடுதல் பணிக்கு பயன்படுத்த பாதுகாப்புத் துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.

Leave a Reply