ராடாரின் பார்வையில் இருந்து தப்பிக்க MH370 விமானி செய்த தந்திரம். அதிர்ச்சி தகவல்

 

11 ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போன MH370 விமானம் குறித்து இதுவரை எவ்வித ஆதாரபூர்வமான தகவல்களும் மீட்புப்படையினர்களுக்கு கிடைக்கவில்லை. விமானத்தை தேடும் பணியில் 8 நாடுகளை சேர்ந்த மீட்புப்படைகள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இதுவரை விமானம் என்ன ஆனது என்பதை கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் நம்ப முடியாத, மற்றும் நம்பும்படியான புதுப்புது தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் இன்று மலேசிய ராடார் ஆராய்ச்சி நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கும் தகவல் கொஞ்சம் வித்தியாசமானது.

MH370 விமானம் ராடாரின் பார்வையில் இருந்து தப்புவதற்காக வேண்டுமென்றே 45000 அடிக்கு மேல் பறந்துள்ளது. அதன்பின்னர் மிகவேகமாக ராக்கெட் வடிவத்தில் செங்குத்தாக கீழே இறங்கி 5000 அடி உயரத்தில் சில நொடிகளில் மாறியுள்ளது. ஒரு விமானம் விண்ணில் பறக்கும்போது 5000 அடிக்கும் மேலும், 40000 அடிக்கும் கீழும் பறந்தால்தான் ரேடாரில் அந்த விமானத்தை கண்காணிக்க முடியும். ராடாரின் பார்வையில் இருந்து தப்புவதற்காக வேண்டுமேன்றே 45000 அடிக்கும் மேல் விமானத்தை கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் கீழே இறங்கவேண்டிய இடம் வந்தவுடன் செங்குத்தாக மிக வேகமாக கீழே 5000 அடி உயரத்திற்கு சில நொடிகளில் வந்துள்ளனர். ஜெட் போல செங்குத்தாக ஒரு விமானம் பறந்தால் அது ராடாரின் கட்டுப்பாட்டுக்குள் வராது. எனவேதான் எந்த நாட்டு ராடாரிலும் MH370 சிக்கவில்லை.

இந்த அதிகாரியின் புதிய தகவலால் மலேசிய மற்றும் சீன நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. கண்டிப்பாக விமானத்தை அதிநவீன முறையில் திட்டமிட்டே கடத்தியுள்ளதாக தெரிகிறது.

 

11

Leave a Reply