நீண்ட நாள் காதலனை கரம் பிடித்தார் அசின் தோழி.

Mithra-Kurian-Wedding-stillsவிஜய் நடித்த காவலன்’ திரைப்படத்தின் அசின் தோழியாகவும் விஜய்யை திருமணம் செய்யும் கேரக்டரிலும் நடித்த நடிகை மித்ரா குரியனின் திருமணம் நேற்று கேரளாவில் நடைபெற்றது. தனது நீண்ட நாள் காதலன் இசைக்கலைஞர் விலியம்ஸ் அவர்களை மித்ரா குரியன் திருமணம் செய்து கொண்டார்.

கொச்சியை சேர்ந்த நடிகை மித்ரா குரியன், இசைக்கலைஞர் வில்லியம்ஸ் என்பவரை கடந்த 2 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவே இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் இருவரது திருமணம் நேற்று திருச்சுரில் உள்ள புனித ஆண்டவர் தேவாலயத்தில் நடைபெற்றது.

அதன்பின்னர் மாலை 6-30 மணிக்கு கொச்சி விமான நிலையத்தில் உள்ள கலையரங்கில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சக நடிகர், நடிகைகள் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply