கருணாநிதி-அழகிரி சந்திப்புக்கு கனிமொழி காரணமா?
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென மு.க.அழகிரி கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். திமுகவில் இருந்து டிஸ்மிஸ் ஆன பின்னர் தந்தையை பார்ப்பதை தவிர்த்து வந்த மு.க.அழகிரியை கனிமொழியும் அவரது தாயார் ராஜாத்தி அம்மாளும் சேர்ந்து சந்திக்க வைத்ததாக கூறப்படுகிறது.
கருணாநிதியின் அரசியல் வாரிசு ஸ்டாலின் என்று அறிவிக்கப்பட்டாலும் அதற்கு கனிமொழியின் தரப்பில் இருந்து மறைமுக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஸ்டாலினுடன் நேரடியாக மோதுவதை தவிர்க்கும் கனிமொழி தனக்கு துணையாக அண்ணன் அழகிரியை பக்கபலமாக்கிக் கொள்ளவே இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்டாலினின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே திமுக தொண்டர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.