மேற்கில் சூரியன் உதித்தாலும் ஊழல் கட்சியுடன் கூட்டணி இல்லை: ஸ்டாலின்

மேற்கில் சூரியன் உதித்தாலும் ஊழல் கட்சியுடன் கூட்டணி இல்லை: ஸ்டாலின்

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்தாலும் ஊழல் கட்சியோடு எந்த காலத்திலும் திமுக கூட்டணி வைக்காது என்று ஸ்டாலின் பொதுகூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சென்னை முகப்பேரில் திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழா மற்றும் 60 ஆண்டுகால சட்டமன்ற வைரவிழா நிகழ்ச்சி பொதுக்கூட்டம் நேற்று இரவு வெகுசிறப்பாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், அதிமுக அரசு எப்போதும் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்யும் அரசுடன் தான் திமுக கூட்டணி வைக்கும். திமுகவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. அதன் வளர்ச்சியை எந்த அளவுக்கு தடுக்க முயற்சிக்கிறார்களோ அந்த அளவிற்கு பீனிக்ஸ் பறவை போல் திமுக வெளியே வரும்’ என்று பேசினார்

சமீபத்தில் திருவாரூரில் நடந்த விழாவில் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசியபோது, ‘ஆளுங்கட்சியை எதிர்ப்பதில் எதிர்க்கட்சி ஏனோதானோ என்ற நிலையில் செயல்படுகிறது. ஸ்டாலின் மக்கள் மன்றத்தில் புலி போலவும், சட்டப் பேரவையில் எலி போல் பதுங்குகிறார். அதோடு, ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரு புதுவித கூட்டணி அமைத்துள்ளது என்று குறிப்பிட்டார். இதற்கு பதிலளிக்கும் நோக்கத்தோடு தான், சென்னை முகப்பேரில் நடந்த கூட்டத்தில் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply