கடந்த பாராளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத தோல்வி அடைந்ததை அடுத்து, தோல்விக்கு முழு பொறுப்பேற்று ஸ்டாலின் ராஜினாமா செய்யவேண்டும் என்று மு.க.அழகிரி வற்புறுத்தி வந்ததை அடுத்து நேற்று இரவு தனது திமுக பொருளாளர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து ராஜினாமா செய்வதாக ஸ்டாலின் முன்வந்தார் என பரபரப்புடன் செய்திகள் வெளியாகின.
இதனால் ஸ்டாலின் வீட்டிற்கும், கருணாநிதியின் வீட்டிற்கு செய்தியாளர்கள் குவிந்தனர். செய்தி சேகரிக்க வந்த நிருபர்களை மிரட்டியதோடு, ஸ்டாலின் குறித்து எவ்வித செய்திகளும் பத்திரிகைகளில் வெளிவரக்கூடாது என ஸ்டாலின் வீட்டு முன் நின்றிருந்த திமுகவில் நிருபர்களை விரட்டி அடித்தனர். இந்த பரபரப்பில் இரண்டு கேமராமேன்களின் கேமராக்கள் கீழே விழுந்து உடைந்தது.
இதையடுத்து செய்தியாளர்கள் கொடுத்த புகாரின் பேரின் அதிரடி நடவடிக்கை எடுத்த தேனாம்பேட்டை போலீஸார் ஸ்டாலின் வீட்டுமுன் நின்று அடாவடி செய்துகொண்டிருந்த 11 திமுகவினர்களை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபின்னர், புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே தோல்வியால் துவண்டிருந்த திமுக தொண்டர்களை தோல்வியின் மனநிலையில் இருந்து திசைதிருப்ப மு.க.ஸ்டாலின் நாடகமாடியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளிவந்தன. இதுகுறித்து கருத்து தெரிவித்த மு.க.அழகிரி, “தி.மு.க. தலைமையை கைப்பற்ற மு.க.ஸ்டாலின் 4 மணிநேர ராஜினாமா நாடகம் ஒன்றை நடத்தியுள்ளார் என்றும், இந்த நாடகம் காலையில் ஒத்திகை நடத்தி மாலையில் அரங்கேற்றுவது போன்றது. கட்சி தலைமையை கைப்பற்ற அவரது ஆலோசகர்கள் இப்படி ஒரு திட்டத்தை கூறியிருக்கலாம். அதன் அடிப்படையில் ஸ்டாலின் செயல்படுகிறார். எனவே கட்சி தலைவர் கருணாநிதி சீர்படுத்திட முன்வர வேண்டும்”