பொய்யர்களின் கூடாரம் மத்திய மாநில அரசு: மு.க.ஸ்டாலின் கண்டனம்
தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்டது. இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் வரும் என தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தற்போது அந்த மகிழ்ச்சிக்கு வேட்டு விழுந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறியும் மையம் கொடுத்த தகவலின்படி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இன்னும் காலதாமதம் ஆகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு 2000 கோடி ஒதுக்கியதாகவும், மதுரையில் அமைக்க ஒப்புதல் தரப்பட்டு கட்டுமானப் பணிகள்தான் தொடங்க வேண்டுமென்றனர் மத்திய, மாநில அரசின் அமைச்சர்கள்!
ஆனால், ஆர்.டி.ஐ தகவல் இவையனைத்தும் பொய் என்பதை உறுதிபடுத்தியுள்ளது! பொய்யர்களின் கூடாரம் மத்திய மாநில அரசு! என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலின், எய்ம்ஸ், மருத்துவமனை, மதுரை