வைகோவின் மக்கள் நல கூட்டணி உடைந்ததா? பெரும் பரபரப்பு

வைகோவின் மக்கள் நல கூட்டணி உடைந்ததா? பெரும் பரபரப்பு
Jawahirulla long
வைகோவின் மதிமுகவில் இருந்து முக்கிய இரண்டாம் கட்ட தலைவர்கள் விலகி திமுகவில் சேர்ந்து வருவதால் மதிமுக வலுவிழந்ததாக கூறப்படும் நிலையில் வைகோவின் சீரிய முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட மக்கள் நல கூட்டு இயக்கத்தில் இருந்தும் தற்போது மனித நேய மக்கள் கட்சி விலகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் நல கூட்டணி ஆரம்பித்த ஒருசில நாட்களில் ஒரு கட்சி விலகியிருப்பது அந்த கூட்டணிக்கு ஒரு பின்னடைவு என்றே அனைவரும் கருதுகின்றனர்.

இதுகுறித்து மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா கூறுகையில், “மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதற்காக மட்டுமே மக்கள் நல கூட்டு இயக்கத்தில் இணைந்திருந்தோமே தவிர அதை தேர்தலுக்கான அரசியல் கூட்டணியாக மாற்றிக் கொள்ள ஒருபோதும் கணிக்கவில்லை. அதிமுக அல்லது திமுக தலைமையிலான கூட்டணியிலேயே இணைய விரும்புகிறோம். எங்களது இம்முடிவை ஏற்கனவே மக்கள் நல கூட்டு இயக்கத் தலைவர்களுக்கு தெரிவித்துவிட்டோம். எனவே, வரும் 5ஆம் தேதி திருவாரூரில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் மமக பங்கேற்காது.

அதிமுக எங்களை தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறதா என்பது எங்களுக்கு தெரியவில்லை. அதேவேளையில் பாஜக இல்லாத அணியிலேயே இடம்பெற வேண்டும் என்பதில் மட்டும் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். தற்போதைய சூழலில் அதிமுக, திமுக-வுக்கு எதிராக வலுவான மாற்றுக் கூட்டணியை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவாகவே இருக்கிறது. இத்தகைய சூழலில் அதிமுக அல்லது திமுக தலைமையிலான கூட்டணியிலேயே நீடிக்க விரும்புகிறோம்” என்றார்.

Leave a Reply