ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் பங்குவர்த்த பரிவர்த்தனை அதிகரிப்பு
பங்குவர்த்தகம் மற்றும் கமாடிட்டி வர்த்தகத்தின் அளவு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆண்ட்ராய்டு போன் அறிமுகமானதில் இருந்து பங்கு வர்த்தகத்தின் விகிதம் அதிகமாகியுள்ளதாக பங்கு வர்த்தக நிறுவனங்கள் தகவல்கள் அளித்துள்ளன.
ஜூன் மாதத்தில் மட்டும் மொபைல் மூலமாக நடைபெற்ற வர்த்தகம் 2.12 சதவீதமாக உள்ளது என்றும் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற மொத்த வர்த்தகத்தில் இது சுமார் நான்கு மடங்கு அதிகம் என்றும் பி.எஸ்.இ தகவல்கள் அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 0.74 சதவீதம் மட்டுமே மொபைல் மூலம் வர்த்தகம் நடந்தது என்பதும் அதே நேரத்தில் பி.எஸ்.இ-யில் கடந்த ஜூன் 2012-ம் ஆண்டு 0.03 சதவீத வர்த்தகம் மட்டுமே மொபைல் மூலம் நடந்தது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூனில் 0.39 சதவீதம் மட்டுமே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2016 ஜூன் மாதம் என்.எஸ்.இ தகவல்படி ரூ.12,732 கோடிக்கு மொபைல் மூலமாக வர்த்தகம் நடந்துள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு மொபைல் மூலமான பங்கு வர்த்தகத்துக்கு செபி அனுமதி வழங்கியது. ஆரம்ப கட்டத்தில் தங்களது டீலர்கள் மூலமே வர்த்தகத்தை செய்துவந்தாலும் சமீப காலங்களில், வர்த்தகர்களுக்காக புரோக்கரேஜ் நிறுவனங்கள் பிரத்யேக செயலிகளை உருவாக்கி உள்ளன. இதனால் மொபைல் வர்த்தகம் அதிகரித்துள்ளன. ஸ்மார்ட்போன்களின் விற்பனை உயர்வது, வர்த்தகம் அதிகரிப்பதற்கான காரணம் என்று சந்தை வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், கோடக் செக்யூரிட்டீஸ், மோதிலால் ஆஸ்வால் பைனான்ஸியஸ் சர்வீசஸ், ஐஐஎப்எல், ஏஞ்சல் புரோக்கிங் ஆகிய நிறுவனங்களின் பிரத்யேக செயலிகள் ஆண்ட்ராய்ட் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் ஸ்டோர்களில் உள்ளன.
Mobil share market trading increasing this June