சென்னையில் நடமாடும் ஏ.டி.எம்.,கள்,: ஞாயிறன்று வங்கிகள் செயல்படும்!

Tamil_News_large_1402592

புதுடில்லி: கனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உதவிடும் வகையில், வங்கிகளின் நேரத்தை நீட்டித்தும், ஞாயிறு அன்றும் வங்கிகள் செயல்படவும் மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் பெரிதும் துயரத்திற்கு ஆளானார்கள். வீடுகளில் முடங்கிய அவர்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டனர். ஏ.டி.எம்.,களுக்கு சென்று பணம் எடுக்கலாம் என சென்ற போது அவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சியாக ஏ.டி.எம்., மையம்களும் தண்ணீரில் மூழ்கின. பணம் எடுக்க முடியவில்லை. இதனால் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்ட மக்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் திணறினர்.

இந்நிலையில், டில்லியில் பொது மற்றும் தனியார் வங்கிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனையில் தமிழகத்தில் கனமழை காரணமாக சேதமடைந்த ஏ.டி.எம்.களை சரிசெய்யவும், ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பவும், பொது மக்களுக்கு உதவிடும் வகையில் நடமாடும் ஏ.டி.எம்.,களை அமைக்க வேண்டும். வங்கிகளின் வேலை நேரத்தை நீட்டிக்க வேண்டும். ஞாயிறு அன்றும் வங்கிகள் செயல்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.

Leave a Reply