’வலிமை’ படப்பிடிப்பில் அஜித்துக்கே அனுமதி இல்லையா? அதிர்ச்சி தகவல்!
அஜித் நடிக்கவிருக்கும் ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்குகிறது என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு குழுவினருக்கு இயக்குனர் எச்.வினோத் ஒரு பெரும் கட்டுப்பாட்டை வைத்துள்ளாராம். இந்த படத்தில் அஜித்துக்கு வித்தியாசமான கெட்டப் இருப்பதால் இந்த கெட்டப் குறைந்தபட்சம் ஃபர்ஸ்ட்லுக் வெளிவரும் வரை வெளியே தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம்
இதனால் படக்குழுவினர் யாருக்கும் மொபைல் போன் பயன்படுத்த அனுமதியில்லை என்று இயக்குனர் எச்.வினோத் கண்டிசன் போட்டதாக தெரிகிறது. இந்த கண்டிஷன் அஜித்துக்கும் பொருந்தும் என்றும் அஜித்தின் மொபைல் போனும் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அஜித் போன்ற மாஸ் நடிகர்களுக்கும் இயக்குனர் எச்.வினோத் கட்டுப்பாடு விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
எச்.வினோத், அஜித், வலிமை, ஃபர்ஸ்ட்லுக்,