தமிழகம் முழுவதும் நடமாடும் தேனீர் வாகனங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பதும் அவரது ஒவ்வொரு அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ரூபாய் மூன்று கோடி செலவில் 20 நடமாடும் தேனீர் வாகனங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் தொடங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது