டெல்லியில் அரசு வேன்களில் வெங்காயம் விற்பனை. 42 பதுக்கல்காரர்கள் கைது.

lead30Aug13கடந்த சிலவாரங்களாக வீழ்ச்சியில் இருந்த வெங்காயத்தின் விலை தற்போது பயங்கரமாக உயர்ந்துவிட்டது. டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதால் பெருமளவில் வெங்காயத்தை பதுக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை, மழையின்மை, கடுமையான வெயில் முதலிய காரணங்களால் வெங்காயத்தின் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதனால் டெல்லி மார்க்கெட்டுக்கு வரும் வெங்காயத்தின் அளவு பெருமளவு குறைந்துள்ளது. இதனால் விலை தாறுமாறாக ஏறியுள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த போராட்டங்கள் நடத்த ஆரம்பித்தவுடன் சுதாரித்த மோடி அரசு, வெங்காயத்தை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி டெல்லியில் மட்டும் சுமார் 532 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது.

வெங்காயத்தை பதுக்கிய 42 வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி அரசே வெங்காயத்தை விற்க முடிவு செய்துள்ளது. அரசு வேன்களில் வெங்காயத்தை ஏற்றி தெருத்தெருவாக விற்பனை செய்யும் நடவடிக்கையும் நடந்து வருகிறது. தற்போது வெங்காயத்தின் விலை ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என டெல்லி மாநில துணைஆளுனர் நஜிப் ஜங் கூறியுள்ளார்.

Leave a Reply