விபச்சார விடுதி நடத்துகிறாரா பெண் சாமியார்? மாடல் அழகி கொடுத்த பரபரப்பு புகார்

விபச்சார விடுதி நடத்துகிறாரா பெண் சாமியார்? மாடல் அழகி கொடுத்த பரபரப்பு புகார்
godwoman
பிரேமானந்தா, நித்தியானந்தா போன்ற ஆண் சாமியார்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகத்தான் இதுவரை செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் தற்போது பெண் சாமியார் ஒருவரும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக கடந்த சில நாட்களாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மும்பையை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் இன்று காலை மும்பை காவல்துறை அதிகாரிகளிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் பெண் சாமியார் ராதேமா விபசார விடுதி நடத்தி வருவதாகவும், அதில் தன்னை இணையுமாறு வற்புறுத்துவதாகவும் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை போரிவிலி பகுதியை சேர்ந்தவர் பிரபல பெண் சாமியார் ராதேமா. இவர் மீது, மாடல் அழகி ஆர்ஷி கான் என்பவர் போலீசில் ஒரு பரபரப்பு புகார் அளித்துள்ளார். அழகி ஆர்ஷிகான் ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகீத் அப்ரிடியுடன் இணைத்து பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் அளித்துள்ள புகார் மனுவில், ‘ராதேமா விபசார விடுதி நடத்துவதாகவும், அதில் தன்னை இணையுமாறு வற்புறுத்துவதாகவும் கூறி உள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், ராதேமா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் சாமியார் ராதேமா மீது பெண் ஒருவர் சமீபத்தில் வரதட்சணை புகார் ஒன்றை போலீசில் அளித்தார். அதில் ராதேமா தன்னுடைய கணவர் வீட்டாரை தூண்டி, தன்னை வரதட்சணை கொடுமைக்கு உட்படுத்துவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், ராதேமாவின் சீடர் ஒருவருடன் தன்னை உறவுகொள்ள வற்புறுத்துவதாக மற்றொரு நடிகையும் குற்றம் சுமத்தினார்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக ராதேமா மீது வழக்குபதிவு செய்யப்பட்டு, அவர் ஜாமீன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply