உலகில் அதிக முஸ்லீம் மக்கள் தொகையை கொண்ட இந்தோனேஷிய நாட்டில் காவல்துறையில் சேர விண்ணப்பிக்கும் பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை நடைபெறும் என்று கூறப்பட்டு உள்ளதால் அந்நாட்டு அரசு பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. மேலும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இது அபாயகரமான மற்றும் அவமானகரமான செயல் என்று கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் குழுவினர் இதுகுறித்து கூறும் போது ‘காவல்துறையில் சேர விரும்பும் திருமணமாகாதவர்களுக்கு கன்னித்தனமை சோதனையை சில மூத்த போலீஸ் அதிகாரிகள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் இதுபோன்ற செயல்கள் பெண்களின் மனநிலையை பாதிக்கும் என்றும் கூறியுள்ளது. .மனித உரிமைகள் ஆணையத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறும் போது ‘இந்த ஆண்டு சில பெண்கள் இந்த சோதனைக்கு உட்படுத்தபட்டனர் என்றும் கன்னிப்பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பெண் மருத்துவர்களால் இரு விரல் சோதனை நடத்த்ப்படுகிறது. என அதிர்ச்சிகரமான நடைமுறையை விவரித்தார்.
இது குறித்து கூறிய 19 வயது பெண் ஒருவர் நான் அந்த மோசமான அனுபவங்களை நினைவில் விரும்பவில்லை. அது அவமானம்,” என்று கூறினார்