முஸ்லிம்களை எதிர்த்து போரிடுவதா? வறுமையை எதிர்த்து போரிடுவதா? மோடி ஆவேசம்

முஸ்லிம்களை எதிர்த்து போரிடுவதா? வறுமையை எதிர்த்து போரிடுவதா? மோடி ஆவேசம்
modi
உத்தரப்பிரதேச மாநிலத்தில், தாத்ரி என்ற பகுதியில் இஸ்லாமியர் ஒருவர் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இடையே கருத்து மோதலையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில் முதல்முறையாக இதுகுறித்து பிரதமர் மோடி கருத்து கூறியுள்ளார்.

நமது நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வறுமையை எதிர்த்து போராட வேண்டும். முஸ்லிம்களை எதிர்த்து போரிட வேண்டுமா? அல்லது வறுமையை எதிர்த்து போராட வேண்டுமா? என்பதை இந்துக்களும், இந்துக்களை எதிர்த்து போரிட வேண்டுமா? வறுமையை எதிர்த்து போரிட வேண்டுமா? என்பதை முஸ்லிம்களும் தீர்மானிக்க வேண்டும்.

இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்து, வறுமைக்கு எதிராக போரிட்டால்தான், இந்த நாடு பலன் பெற முடியும். ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம், சமாதானம் ஆகியவைதான் இந்த நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்லும்.

சில அரசியல்வாதிகள் அரசியல் லாபத்துக்காக பொறுப்பற்ற விதத்தில் பேசி வருகிறார்கள். அத்தகைய பொறுப்பற்ற பேச்சுக்களை, யார் பேசினாலும், ஏன், நரேந்திர மோடியே பேசினாலும் கூட, நீங்கள் அவற்றுக்கு செவி சாய்க்க வேண்டியதில்லை. அவற்றை காது கொடுத்து கேட்காமல் புறக்கணித்து விட வேண்டும்.

இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

Leave a Reply