ரஜினிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து. நள்ளிரவு 11.59க்கு வாழ்த்து கூறிய பார்த்திபன்.

modi and rajiniசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு இன்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் இன்று வெளியாகவிருக்கும் லிங்கா படம் வெற்றி அடையவும் வாழ்த்து கூறியுள்ளார்.

மேலும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்  ஷா, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங், தமிழக பாரதிய ஜனதா கட்சித்தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் ஆகியோர்களும் ரஜினிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துளனர்.

ரஜினியின் நீண்ட நாள் நண்பர் கமல்ஹாசன் வீடியோ மூலம் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸில் இருந்து சமீபத்தில் பிரிந்து சென்று மீண்டும் தா.ம.கவை ஆரம்பித்துள்ள வாசன் ஆகியோர்களும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திரையுலக பிரமுகர்கள் அனைவரும் தொலைபேசி மூலம், சமூக வலைத்தளங்கள் மூலம் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் பார்த்திபன் ரஜினிக்கு மிகச்சரியாக நள்ளிரவு 11.59 மணிக்கு ரஜினிக்கு போன் செய்து தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

Leave a Reply