காஷ்மீர் வன்முறை. ஒருமாதத்திற்கு பின்னர் மெளனம் கலைத்த மோடி

காஷ்மீர் வன்முறை. ஒருமாதத்திற்கு பின்னர் மெளனம் கலைத்த மோடி

modiஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஹில்புல் முஜாகிதீன் தளபதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வன்முறையால் இதுவரை 55-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதுமட்டுமின்றி 5500-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக அங்கு அசாதாரண நிலைமை உள்ள நிலையில் ஒரு மாதம் கழித்து தற்போது பிரதமர் மோடி தனது மவுனத்தைக் கலைத்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

சிலருடைய அரசியல் சதி வெற்றி அடைந்திருப்பதாகவும், பூலோக சொர்க்க பூமியான காஷ்மீரில் கலாச்சாரமும் கண்ணியமும் அடிபடுவதை அனுமதிக்க முடியாது என்றும் இதற்கு ஒரே தீர்வு ஜனநாயக பாதையும், பேச்சு வார்த்தைப் பாதையும்தான் என்று பிரதமர் கூறியுள்ளார்.

இந்நிலையில் காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து எதிர்க்கட்சிகள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்திடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று விவாதிக்க உள்ளதாகவும், இந்த விவாதத்திற்கு பின்னர் காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப அமைதிப்பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply