இந்திய மக்களை மோடி ஏமாற்றிவிட்டார். ராம்ஜெத்மலானி குற்றச்சாட்டு
கடந்த பாராளுமன்ற தேர்தல் வரை நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த பிரபல மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, மோடி பிரதமர் ஆன பின்னர் அவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் பிரதமர் மீது கடும் குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். இந்திய மக்களை மோடி ஏமாற்றியுள்ளதாகவும், அதற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதமே மோடியுடன் தான் உறவை முறித்து கொண்டதாகவும், பிரதமர் ஆன பின்னர் மோடியின் நடவடிக்கைகளில் தனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை என்று கூறிய ராம்ஜெத்மலானி, நேற்றி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ”எனக்கு வாய்ப்பிருந்தால், மோடிக்கு தோல்வியை பரிசளிப்பதற்காக நிதிஷ்குமார் அரசிற்கே வாக்களிப்பேன். மேலும், இந்திய மக்களை ஏமாற்றியதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் பகிரங்கமாக தெரிவித்தார்,
ராம்ஜெத்மலானியின் கருத்துக்கு பாஜகவின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.