தேர்தலின் போது மோடியின் போலியான வாக்குறுதிகளை நம்பி ஏமாறிய மக்கள் தற்போது தங்கள் தவறை உணரத்தொடங்கியுள்ளனர். மோடியின் சர்வாதிகார போக்கு மக்களாட்சிக்கு பயன் தராது என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் கூறியுள்ளார்.
தேர்தலின் போது கவர்ச்சிகரமான திட்டங்களை மக்கள் முன்வைத்த மோடி, ஆட்சியை பிடித்தவுடன் தனது சுயரூபத்தை காட்டிவிட்டார். அவருடைய வேஷம் கலைந்துவிட்டது. உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதே இதற்கு சான்று. குஜராத் முதல்வராக இருந்தபோது கடைபிடித்த சர்வாதிகாரத்தை பிரதமர் ஆனபின்னும் தொடர்ந்து கடைபிடித்து வருகிறார் மோடி. சுதந்திரமாக செயல்பட முடியாமல் மத்திய அமைச்சர்கள் இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகி”றது. முக்கிய பிரச்சனைகளில் தனது அமைச்சர்களையே நம்பாமல் மெளனியாக மோடி விளங்குகிறார்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது மோடியின் நிர்வாகத்திறமையின்மை வெளிப்படையாகவே தெரிவதாக பொதுமக்கள் பேசத்தொடங்கிவிட்டனர். கூடிய விரைவில் மோடி ஆட்சி கவிழ்ந்து மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என முதல்வர் பிருத்விராஜ் கூறினார்.