உலக பிரபலங்கள் பட்டியலில் மோடிக்கு இடமில்லாதது ஏன்?
பிரபல அமெரிக்க ஊடகமான டைம்ஸ் உலகின் 100 பிரபலங்களை தேர்வு செய்ய ஆன்லைனில் வாக்கெடுப்பு நடத்தியது. இதில் இந்திய பிரதமரும் போட்டியில் இருந்த நிலையில் அவருக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. ஆன்லைன் மூலம் அவருக்கு யாரும் ஓட்டு போடாததால் உலகின் பிரபலங்கள் பட்டியலில் மோடியின் பெயர் இடம்பெறவில்லை
இந்த பட்டியலில் பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட் முதலிடம் பிடித்துள்ளார். பிலிப்பைன்சின் புதிய அதிபராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர் பொறுப்பேற்றார். அன்று முதல் அங்கு போதை பொருள் ஒழிப்பு போரில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். போதை பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என 8 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரத்துக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளார்.
மேலும் 100 பிரபலங்களின் பட்டியலில் கனடா பிரதமர் ஐஸ்டின் டிருடியோ, போப் ஆண்டவர் பிரான்சிஸ், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க்ஷுகர் பெர்க் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.