மோடி அரசின் செயல்பாடுகள் எப்படி? கருத்துக்கணிப்பில் புதிய தகவல்
பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014ஆம் ஆண்டு பதவியேற்றது. தற்போது கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் மோடி அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பது குறித்த கருத்துக்கணிப்பு ஒன்றை ஏ.பி.பி. நியூஸ் தொலைக்காட்சி மற்றும் நீல்சன் அமைப்பு ஆகியவை நடத்தின. இந்த கருத்துக்கணிப்பில் முடிவுகள் பின்வருமாறு:
மோடி அரசின் செயல்பாடுகள் சராசரியைவிட அதிகமாகவே இருப்பதாக வாக்களித்தவர்கள் 46 சதவீதம் பேர்.
பிரதமராக மோடியின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருப்பதாக கருத்து தெரிவித்தவர்கள் 54 சதவீதம் பேர்
செல்வாக்கு நாளுக்கு நாள் சரிந்து வருவதாக கருத்து தெரிவித்தவர்கள் 47 சதவிகிதம் பேர்
மோடியின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக கருத்து தெரிவித்தவர்கள் 45 சதவிகிதம் பேர்
தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் பா.ஜ.க. கைப்பற்றும் தொகுதிகள் 301. கடந்த 2014-ல் பாஜக 339 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கைப்பற்றும் தொகுதிகள் 108. கடந்த 2014-ல் இந்த கூட்டணிக்கு 62 தொகுதிகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க., காங்கிரசுக்கு அடுத்தபடியாக அகில இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக ஆம் ஆத்மி இருக்கும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.