சென்னை வந்தார் பிரதமர் மோடி. முதல்வர் ஜெயலலிதா வரவேற்பு

சென்னை வந்தார் பிரதமர் மோடி. முதல்வர் ஜெயலலிதா வரவேற்பு

cm and pm cm and pm 1 cm and pm 2 cm and pm 3கைத்தறி நெசவாளர் விழாவில் கலந்துகொள்ள இன்று காலை சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று வரவேற்றார். முதல்வரை தொடர்ந்து மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பிரதமர் மோடியை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அவர்களிடம் கைகுலுக்கி வரவேற்பை மோடி ஏற்றுக் கொண்டார்.
 
மத்திய அரசு சார்பில் வருடந்தோறும் நடத்தப்படும் கைத்தறி நெசவாளர்கள் விழா, முதல் முறையாக சென்னையில் இன்று நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

இதற்காக அவர் இன்று காலை 7.45 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை புறப்படுகிறார். காலை 10.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழக ஆளுநர் ரோசய்யா முதலில் வரவேற்றார். பின்னர், முதல்வர் ஜெயலலிதா, மோடிக்கு பொன்னாடை அணிவித்து மலர்கொடுத்து கொடுத்து வரவேற்றார்.

மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் வரையுள்ள 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகளில் வரிசையாக பா.ஜ.க. தொண்டர்கள் நின்று பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

Leave a Reply