மத்திய அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது என்றும், தினமும் உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் முரண்பாடு எழுகிறது என்றும் சென்னையில் நேற்று நடந்த பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் பேசினார்.
சென்னை வண்டலூர் அருகே நேற்று நடந்த பாரதிய ஜனதா கட்சியின் பிரமாண்ட கூட்டத்தில் மோடி பேசியதில் இருந்து சில துளிகள்:
சென்ற தேர்தலில் வெற்றி பெற முடியாமல், பின்னர் மறுவாக்கு எண்ணிக்கை மூலம் மோசடியாக தேர்ந்தெடுக்கபட்ட ப.சிதம்பரம் என்னைப்பற்றி பேசுவதற்கே தகுதியில்லாதவர்.
நாட்டின் அனைத்துஆளுநர் மாளிகைகளும் காங்கிரஸ் கட்சியின் கிளை அலுவலகம் போல செயல்படுகிறது. அரசியல் காரணங்களுக்காக மட்டுமே சி.பி.ஐ பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அண்டை நாடுகளுடனான உறவை சீரமைக்க நிலையான, உறுதியான மத்திய அரசு தேவை. அதை கொடுக்க தற்போதைய மத்திய அரசு தவறிவிட்டது.
கிடங்குகளில் தேங்கியிருக்கும் உணவுப்பொருட்களை ஏழைகளுக்கு கொடுக்காமல், அவை கெட்டுப்போனவுடன் சாராய ஆலைகளுக்கு தருகிறது மத்திய அரசு,.
மத்திய அரசின் அக்கறையின்மையால்தான் தமிழக, குஜராத் மீனவர்கள் இலங்கை மற்றும் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கங்கை, காவிரி இணைப்பு திட்டத்தை வாஜ்பாய் அறிவித்தார் என்ற ஒரே காரணத்திற்காக மத்திய அரசு செயல்படுத்தாமல் அந்த திட்டத்தை முடக்கி வைத்துள்ளது.
இவ்வாறு குஜராத் முதல்வர் மோடி பேசினார். பின்னர் அவர் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இரவு தங்கினார். இன்று எஸ்.ஆர்.எம். கல்லூரியில் நடக்கும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் மதியம் கொச்சி செல்கிறார்.
[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”http://bit.ly/1bInEI3″ standard=”http://www.youtube.com/v/r-_-f-r8RrE?fs=1″ vars=”ytid=r-_-f-r8RrE&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep7204″ /]