இந்திய -ஜப்பான் பிரதமர்கள் இன்று பேச்சுவார்த்தை. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

modi japanஜப்பான் நாட்டிற்கு ஐந்து நாள் பயணமாக சென்றுள்ள பாரத பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபே அவர்களுடன் இன்று முக்கிய பேச்சு வார்த்தை நடத்துகிறார். அப்போது இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

ஜப்பான் நாட்டுக்கு கடந்த 30ஆம் தேதி காலை புறப்பட்டுச் சென்ற மோடிக்கு,  ஜப்பானின் முந்தைய தலைநகரான கியோட்டோவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவை, மோடி சந்தித்து பேசினார். இந்தியாவிலுள்ள வாரணாசி நகரத்தை ‘ஸ்மார்ட்’ நகரமாக்குவதற்கான வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

இந்நிலையில் நேற்று கியோட்டோ நகரில் 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான புத்தர் ஆலயமான டோஜி என்ற ஆலயத்திற்கு சென்றார்.  சுமார் அரை மணி நேரம் கோவிலை சுற்றிப்பார்த்த மோடி, அங்குள்ள புத்தரை பிரார்த்தனை செய்தார். மேலும் அதே நகரில் உள்ள மற்றொரு பழமையான கோயிலான கின்காகுஜி என்ற புத்த கோயிலுக்கும் சென்று அவர் வழிபாடு நடத்தினார்.

மோடியின் ஜப்பான் பயணத்தின் மூன்றாவது நாளான இன்று  அவர் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவை, தலைநகர் டோக்கியோவில் சந்தித்து முக்கிய பேச்சு வார்த்தை நடத்துகிறார். அச்சமயத்தில் பாதுகாப்பு, உள் கட்டமைப்பு மேம்பாடு, சிவில் அணுசக்தி மற்றும் பொருளாதார துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

Leave a Reply