ஐந்து நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்திய தூதரக அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அவரை நியூயார்க் நகர மேயர் மரியாதை நிமித்தமாக சில நிமிடங்கள் சந்தித்துப் பேசினார்.
பின்னர் நரேந்திர மோடி, செப்.11, 2011ஆம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாத தாக்குதலில் தகர்க்கப்பட்ட உலக வர்த்தக மையத்தின் நினைவிடத்திற்கு சென்று அங்கு அஞ்சலி செலுத்தினார். ஐநா தலைமையகத்தின் 69-ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் இன்னும் சில நிமிடங்களில் அவர் உரையாற்ற இருக்கின்றார்.
பிரதமரின் உரையில் சர்வதேச பிரச்னைகள், இந்தியா எதிர்கொண்டு வரும் தீவிரவாத சவால்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது. ஐ.நா சபையில் பேசி முடித்தவுடன், ஐநா பொதுச் செயலர் பான் கி மூன், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா ஆகிய முக்கிய தலைவர்களை மோடி சந்தித்துப் பேசுகிறார்.
5 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யூம் நரேந்திர மோடி, 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மோடியின் வருகை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், அவரை வரவேற்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மிகுந்த ஆரவத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.