பிரிக்ஸ் மாநாட்டில் பங்குகொள்ள பிரேசில் சென்றுள்ள பாரத பிரதமர் நரேந்திரமோடி, அங்கு ரஷ்ய அதிபர் புதின் அவர்களை நேரில் சந்தித்து, “கூடங்குளம் அணுமின் நிலையத்தை நேரில் பார்வையிட வருமாறு இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை புதின் மகிழ்ச்சியுடன் ஏற்றுள்ளதால் எதிர்வரும் டிசம்பர் புதின் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா சுதந்திரம் பெற்றதுமுதல், இந்தியா- ரஷ்யா நட்புறவு நீடித்து வருவதை இந்தியக் குழந்தைகள் கூட அறியும் என்றும், இந்திய ரஷ்ய நட்புறவு மேலும் வலுவடைய இரு நாடுகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என புதினிடம் மோடி கோரிக்கை வைத்தார். மேலும் இந்திய அணுசக்தி, ராணுவம் மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்த இந்தியா உறுதி கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த புதின், இந்தியா – ரஷ்யா இடையேயான நட்புறவு நீடித்து வருவதற்கு இருநாடுகளும் இணைந்து நிகழ்த்தும் அணுமின் திட்டம் ஒரு முக்கிய காரணம் என்றும், வரும் டிசம்பர் மாதம் இந்தியா வர திட்டமிட்டுள்ளதாகவும், அந்த சமயத்தில் கண்டிப்பாக கூடங்குளம் அணுமின் நிலையத்தை நேரில் பார்வையிட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.