பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தங்கள் குடும்பத்தில் ஒருவர் என லதா ரஜினிகாந்த் இன்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பே அவர் ரஜினிக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நெருங்கிய நண்பராக இருந்தார். ரஜினி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, நேரில் வந்து சந்தித்து நலம் விசாரித்து சென்றவர். அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறோம் என்று கூறியுள்ளார்.
நரேந்திர மோடியுடன் உள்ள நெருக்கத்திற்கு, தேர்தல் நாளன்று ரஜினி முதல் ஆளாக சென்று ஓட்டு போட்டதற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. அது தற்செயலாக நடந்தது என்று கூறிய ரஜினிகாந்த் ‘கோச்சடையான் படத்திற்கு ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளும் முடிந்துவிட்டதாகவும், படம் திட்டமிட்டபடி மே 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் கூறினார். முதல் நாள் முதல் காட்சி அன்று ரசிகர்களோடு அமர்ந்து தானும் தன்னுடைய குடும்பத்தினர்களும் படம் பார்க்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.