கடந்த சில நாட்களுக்கு முன்னர் நரேந்திர மோடியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்வேன் என ஒரு காங்கிரஸ் வேட்பாளர் பேசிய பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் இன்று சமாஜ்வாதி கட்சி தலைவர்களில் ஒருவர் நரேந்திர மோடியை நாயுடன் ஒப்பிட்டு பேசியதால் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமாஜ்வாதி கட்சி முன்னணி தலைவர்களில் ஒருவரான அசம் கான் இன்று டெல்லியில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, நரேந்திர மோடி ஒரு நாய் மகனின் சகோதரர் (Modi is the brother of a dog’s son )என்று பேசியுள்ளார். இதனால் அந்த கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதே கூட்டத்தில் நரேந்திர மோடியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ரவுடி என்றும், ராஜ்நாத் சிங் அவரின் அடிமை என்றும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பேனி பிரசாத் வர்மா தாக்கி பேசியிருந்தார்.
ஏற்கனவே உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் நரேந்திர மோடியை ஒரு மிருகத்துடன் ஒப்பிட்டு பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அசம்கானின் இந்த சர்ச்சை பேச்சுக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.