நாளை மோடி-ஜெயலலிதா சந்திப்பு. திருப்பங்கள் ஏற்படுமா?

நாளை மோடி-ஜெயலலிதா சந்திப்பு. திருப்பங்கள் ஏற்படுமா?
18-jayalalitha-modi8-600-jpg
கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலலிதா நாளை பாரத பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பில் அவர் தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலந்தாலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை காலை 11.30 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி செல்லும் முதல்வர் ஜெயலலிதாவுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், முதல்-அமைச்சரின் செயலாளர்கள் வெங்கட் ரமணன், சிவ்தாஸ் மீனா, விஜயகுமார், ராமலிங்கம், கூடுதல் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் செல்கின்றனர்.

மதியம் 2 மணிக்கு டெல்லி செல்லும் முதல்வர் அங்கு தமிழ்நாடு இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கின்ரார். பின்னர் 4.40 மணிக்கு பிரதமர் மோடியை சுமார் 50 நிமிடங்கள் சந்தித்து பேசுகிறார். அப்போது முதல்வர் 32 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனு ஒன்றையும் அளிக்க இருக்கிறார்.

முதல்வரின் மனுவில் தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கான கூடுதல் நிதி, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம், உணவு தானிய ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்கோள் மற்றும் இலங்கை தமிழர் பிரச்சினை, இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை மீட்க எடுக்க வேண்டிய நடவடிக்கை ஆகிய உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமரை சந்தித்த பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கும் முதல்வர் பின்னர் இரவு 7 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

தற்போதைய நிலையில் அதிமுகவின் ராஜ்யசபா மற்றும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளதால் இந்த சந்திப்பு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிர்

Leave a Reply