மன்மோகன்சிங்கிடம் பொருளாதார பாடம் படித்தார் மோடி. ராகுல்காந்தி

மன்மோகன்சிங்கிடம் பொருளாதார பாடம் படித்தார் மோடி. ராகுல்காந்தி
rahul gandhi
பிரதமர் மோடி மன்மோகன்சிங் அவர்களிடம் ஒரு மணி நேரம் பொருளாதார பாடம் படித்தார் என காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கிண்டலாக பேசியிருப்பது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்து உயர்மட்ட தலைவர்களும் மோடியின் ஓராண்டு ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் நேற்று முன் தினம் காலை இதுவரை அமைதியாக இருந்த மன்மோகன் சிங் அவர்களும் பாஜகவை விமர்சனம் செய்தார். மோடி ஆட்சியில் பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் அன்று மாலையே மோடியின் அழைப்பை ஏற்று பிரதமரின் ரேஸ்கோர்ஸ் வீட்டில் மோடியை சந்தித்தார் மன்மோகன்சிங். இந்த சந்திப்பு குறித்து இரு தலைவர்களுமே கருத்து தெரிவிக்காத நிலையில் மன்மோகன்சிங்கிடம் பொருளாதாரம் குறித்து ஆலோசனை செய்யவே மோடி அவரை சந்தித்ததாக பாஜக கூறியது.
இந்நிலையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாணவர் சங்க கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் துணைத்  தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, “பா.ஜ ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்து வருகிறது என முன்னாள்  பிரதமர் மன்மோகன் சிங் இந்த கூட்டத்தில் நேற்று முன்தினம் பேசினார். அதன்பின்  மன்மோகன் சிங்கை அழைத்தார் பிரதமர் மோடி. பொருளாதாரம்  பற்றி அவரிடம் ஒரு மணிநேரம் பாடம் படித்தார். பொருளாதாரம் எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ள மோடி விரும்பியிருக்கலாம்’ என்று கூறினார்.

Leave a Reply