பாரீஸ் பருவ மாநாட்டில் மோடி, நவாஸ் ஷெரீப்புடன் மோடி சந்திப்பு

பாரீஸ் பருவ மாநாட்டில் மோடி, நவாஸ் ஷெரீப்புடன் மோடி சந்திப்பு
modi
பருவநிலை மாநாட்டில் கலந்து கொள்ள பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு வரலாறு காணாத வகையில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த மாநாட்டின்போது பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர்களை சந்தித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தினார். இந்த மாநாட்டின் பேசிய பிரதமர் மோடி ‘இந்தியாவின் சுற்றுசூழலை சீர்குலைக்காத வகையில் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பூமியையும், இயற்கையையும் பாதுகாப்பதே இந்தியாவின் முதன்மைக் குறிக்கோள்’ என்றும் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியபோது, ‘வறுமை மற்றும் புகை மாசு வெளியேற்றத்திற்கு எதிராக இந்தியா தொடர்ந்து போராடும்’ என நம்பிக்கை அளித்தார்.

முன்னதாக மாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னர் பிரதமர் மோடி மாநாட்டு மையத்தில் உள்ள ஒரு லாபியில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன்  கைகுலுக்கி கொண்டு, அவருடன் சகஜமாக உரையாடினார். இந்த சந்திப்பை இந்திய ஊடகங்கள் மட்டுமின்றி பாகிஸ்தான் அரசு ஊடகமான பி.டி.வியும் ஒளிபரப்பியது. இரு தலைவர்களின் சந்திப்பு ‘ஆக்கப்பூர்வமான வளர்ச்சி’  என்று அந்த டிவி தனது செய்தியில் கூறியது. மேலும் இரு நாட்டு பிரதமர்களின் இந்த சந்திப்பானது “சுமூகமான சூழ்நிலையில்”  நடந்துள்ளது என்றும் அந்த தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.

English Summary: Pakistan media hails PM Narendra Modi , Nawaz Sharif meet in Paris 

Leave a Reply