பிரதமர்-ஜனாதிபதி திடீர் சந்திப்பு. பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை ஆரம்பம்
நேற்று முன் தினம் உரி ராணுவ முகாமில் நடந்த தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் பலியான நிலையில் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை பின்னணி இருப்பதாக நம்பப்படுகிறது. பாகிஸ்தான் ஆதரவு இல்லாமல் இந்த தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படும் நிலையில் பாகிஸ்தானை உலக அரங்கில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கையை இந்தியா ஆரம்பித்துள்ளது.
இதன் முதல்கட்டமாக நேற்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை செய்துள்ளார். பாகிஸ்தானின் தொடர் தீவிரவாத தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிரடி நடவடிக்கை எடுக்கும் நடைமுறைகள் விரைவில் தொடங்கவுள்ளதாம்
மேலும் நாளுக்கு நாள் பாஜகவின் செல்வாக்கு நாட்டு மக்களிடையே குறைந்து வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தால் இதன்மூலம் இழந்த செல்வாக்கை திரும்ப பெறலாம் என்றும் பாஜக மூத்த தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர். எனவே விரைவில் மத்திய அரசிடம் இருந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை குறித்த அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.