சவுதி மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

சவுதி மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

saudi arabiaபிரேசில் மற்றும் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று சவுதி அரேபிய மன்னரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது.

தனது பயணத்தின் நிறைவு நாளான நேற்று சவுதி அரேபியா தலைநகர் ரியாத் நகரில் சவுதி அரேபிய தொழில் அதிபர்கள் மற்றும் இந்திய வர்த்தக தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், “உலக நாடுகளின் பொருளாதாரம் சரிந்து வரும் நிலையிலும் இந்தியாவின் பொருளாதாரம் நம்பிக்கை தரும் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது என்றும் இந்தியாவுக்கு முதலீடு செய்ய வரும் சவுதி அரேபிய முதலீட்டாளர்களுக்கு பெட்ரோலியம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கட்டமைப்பு, மருத்துவம், ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு ஆகிய துறைகள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான உகந்த துறைகளாக உள்ளதாகவும் கூறினார்.

பின்னர் மாலையில் சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல் சாத் அரசவையில் அவரை மோடி சந்தித்து பேசினார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மன்னருக்கு, மோடி கேரளாவில் கி.பி.629-ம் ஆண்டில் அரேபிய வணிகர்களால் கட்டப்பட்ட செரமான் ஜூமா மசூதியின் தங்க முலாம் பூசிய மாதிரி வடிவத்தை நினைவுப் பரிசாக வழங்கினார். சவுதி அரேபியாவின் உயர்ந்த விருதை மோடிக்கு மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல் சாத் வழங்கினார்.

இதனை தொடர்ந்து இருநாடுகள் இடையே புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்வது உள்பட 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இருநாடுகள் இடையே ராணுவ உறவை மேம்படுத்துவது, வர்த்தகம், முதலீடு, தீவிரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் ஒத்துழைத்து செயல்படுவது குறித்தும் இரு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Leave a Reply