நாடாளுமன்ற வளாகத்தில் மோடியுடன் வைகோ திடீர் சந்திப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் மோடியுடன் வைகோ திடீர் சந்திப்பு

modi and vaikoகடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பாரதிய ஜனதா தலைமையிலான அணியில் முதலில் கூட்டணி வைத்ததும், தேர்தலுக்கு பின்னர் முதலில் கூட்டணியில் இருந்து வெளியேறியதும் வைகோவின் மதிமுக கட்சிதான். இந்நிலையில் இன்று பிரதமர் மோடியை வைகோ திடீரென சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு காரணமாக தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டம் இன்று காலை ஆரம்பிக்க இருந்த சில நிமிடங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடியை, வைகோ திடீரென சந்தித்து பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சந்திப்பின்போது, ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமரிடம் வைகோ கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 20 தமிழர்களை சுட்டுக்கொன்றவர்களை தண்டிக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினேன். மேலும், நில கையகப்படுத்துதல் மசோதா விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாக பிரதமரிடம் தெரிவித்தேன் என்று வைகோ கூறினார்.

இந்த சந்திப்பால் மீண்டும் பாரதிய ஜனதா – மதிமுக உறவு மலருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.

Leave a Reply