தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த நரேந்திர மோடி இன்று சற்று முன்னர் நடிகர் விஜய்யை சந்தித்து பேசினார்.
கோவையில் உள்ள லீ மெர்டியன் ஹோட்டலில் தங்கிய மோடியை விஜய் தனியாக சந்தித்து பேசினார். இருவரும் 20 நிமிடங்கள் பேசியதாகவும், இந்த சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் விவாதிக்கவில்லை என்றும் விஜய் தரப்பில் இருந்து கூறப்பட்டது. ஆயினும் விஜய் ரசிகர்கள் மோடியை சந்தித்தது குறித்து தங்கள் மகிழ்ச்சியினை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசிய மோடி, அடுத்ததாக மாஸ் நடிகர் ஒருவரை சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.\