சீன அதிபருடன் மோடி சந்திப்பு. இந்திய ,சீன எல்லைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை.

wangyimodi--621x414பிரிக்ஸ் மாநாட்டில் பங்குகொள்ள பிரேசில் சென்றுள்ள பாரதப்பிரதமர் நரேந்திரமோடி, அங்கு சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இருநாட்டு எல்லைப் பிரச்னை குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்த அமைப்பு பிரிக்ஸ் உச்சி மாநாடு,  பிரேசில் நாட்டில் போர்ட்டலசா நகரில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.  இந்த மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் சென்றுள்ளார்.

நேற்று பிரேசில் நாட்டில் சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை அவர்களை பிரதமர் மோடி சந்தித்து, சுமார் 80 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் இந்திய,சீன எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு வருமாறு சீன அதிபருக்கு மோடி அழைப்பு விடுத்தார்.

மேலும், எல்லையில் அமைதியை ஏற்படுத்தி இரு நாடுகளும் பொருளாதார ரீதியில் இணைந்து செயலாற்ற அவர் அழைப்பு விடுத்தார்.  இந்தியா-சீனா ஆகிய இருநாடுகளும் நட்புடன் இருந்தால் ஆசியாவில் இரு நாடுகளுக்கும் பலம் பெருகும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்

அதேபோல் சீனா அதிபர் ஜி ஜின்பிங் அவர்களும் மோடியையும் சீனா நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து சீனா அதிபர், வருகின்ற செப்டம்பர் மாதத்தில் இந்தியா வரலாம் என்றும் நவம்பர் மாத வாக்கில் மோடி சீனா செல்லாம் என்றும் கூறப்படுகிறது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1nBamTO” standard=”http://www.youtube.com/v/XGOukUa016Q?fs=1″ vars=”ytid=XGOukUa016Q&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep4713″ /]

Leave a Reply