46 பேர் கொண்ட மோடி அமைச்சரவையில் 7 பெண்களும் ஐந்து முன்னாள் முதல்வர்களும் இடம்பெற்றுள்ளனர்.
நேற்று மாலை குடியரசு தலைவர் மாளிகையில் முன் நடந்த பிரமாண்ட பதவியேற்பு விழாவில் பிரதமரும் 46 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
சுஷ்மா ஸ்வராஜ், உமா பாரதி, நஜ்மா ஹெப்துல்லா, மேனகா காந்தி, ஹர்சிம்ரத் கௌர் பாதல், ஸ்மிருதி இரானி, நிர்மலா சீதாராமன் ஆகிய ஏழு பெண் அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களில் நிர்மலா சீதாராமன் தவிர மீது ஆறு பெண் அமைச்சர்களும் கேபினட் அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மோடியின் அமைச்சரவையில் நரேந்திர மோடி (குஜராத்), ராஜ்நாத் சிங் (உத்தரப் பிரதேசம்), சுஷ்மா ஸ்வராஜ் (தில்லி), உமா பாரதி (மத்தியப் பிரதேசம்), சதானந்த கௌடா (கர்நாடகம்) ஆகிய ஐந்து முன்னாள் முதலமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் ஒரு துணை முதல்வரும் அமைச்சராக பதவியேற்றுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் முன்னாள் துணை முதல்வராக இருந்த கோபிநாத் முண்டே என்பவரும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.
பாரதிய ஜனதாவில் மூத்த தலைவர்களின் வாரிசுகள் யாருக்கும் பதவி கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாரிசு அரசியலை விமர்சனம் செய்து வந்த பாரதிய ஜனதா, அதே தவறை தானும் செய்யக்கூடாது என்பதற்காக முக்கிய தலைவர்களின் வாரிசுகள் ஒதுக்கப்பட்டனர்.