ராஜீவ் காந்தியை தாக்கிய கடற்படை சிப்பாய் மோடிக்கு மிரட்டல். பெரும் பரபரப்பு.

 modi in srilankaகடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை சென்றிருந்தபோது அவரை தாக்கிய கடற்படை சிப்பாய் விஜித ராகன விஜேமுனி என்பவர் இலங்கையின் உள்விவகாரங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலையிட கூடாது என எச்சரித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நேற்று இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் ராஜீவ் காந்தியை தாக்கிய கடற்படைச் சிப்பாயான விஜித ரோகண விஜேமுனி நேற்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஆனால் அதே நேரத்தில் நரேந்திர மோடி எமது நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என்றும் அவர் எமது பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ராஜீவ்காந்தி போன்று அவரும் தலையீடு செய்ய முனைந்தால், தமிழர் பிரச்னை மீண்டும் கிளம்பும். ஆயிரக்கணக்கான இலங்கைப் படையினரும், 1500 இந்தியப் படையினரும், போரில் மரணமாகியுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்துடன் மோடி உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டும். அமைதியைப் பேண வேண்டும். போர் முடிவுக்கு வந்த பின்னர், இங்கு அமைதி நிலவுகிறது. தமிழர்கள் மீன்பிடிக்கிறார்கள், விவசாயம் செய்கிறார்கள்.

பொருளாதாரமும், சுற்றுலாத்துறையும் நன்றாக இருக்கிறது. எனவே தமிழர்கள் விவகாரத்தில் தேவையில்லாத தலையீடு இந்திய அரசிடம் இருந்து இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

Leave a Reply