மோடி-ஒபாமா செப்டம்பரில் சந்திப்பு. வெள்ளை மாளிகை தகவல்.

modi and obamaபாரத பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களும் செப்டம்பர் 29, 30 தேதிகளில் வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளதாக அதிகாரபூர்வமான தகவலை அமெரிக்க அரசின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக குஜராத் முதல்வராக மோடி இருந்த போது அமெரிக்கா செல்வதற்கு அவருக்கு அமெரிக்க அரசு விசா வழங்க அனுமதி மறுத்தது. ஆனால் மோடி இந்திய பிரதமராக பதவியேற்றதும் அமெரிக்கா தன்னுடைய நிலையில் இருந்து மாறியதோடு, அமெரிக்கா வரும்படி அதிபர் ஒபாமா தனிப்பட்ட முறையிலும் அவருக்கு அழைத்து விடுத்தார்.

அமெரிக்க அதிபரின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவிற்கு இம்மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் சென்று ஒபாமாவை சந்தித்து பேச உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், மோடியின் வருகையை அதிபர் ஒபாமா ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் கூறியுள்ளது.
 
இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கிடையேயான உறவு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் விவகாரங்கள் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

Leave a Reply