17 ஆண்டுகளுக்கு பின் நேபாளம் செல்லும் இந்திய பிரதமர். 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து.

modi in nepalஇரண்டு நாள் அரசு முறை பயணமாக நேபாளம் சென்றுள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி மூன்று முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலையில் இரண்டு நாள் பயணமாக நேபாளத்திற்கு சென்றார். தலைநகர் காத்மண்டுவில் அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் நேபாளம் செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மோடி, மூன்று முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

முதல் ஒப்பந்தம், நேபாளத்துக்கு இந்தியா அயோடின் கலந்த உப்பு வழங்குவது தொடர்பானது.

இரண்டாவது ஒப்பந்தம் பஞ்சேஸ்வர் பன்னோக்குத் திட்டம் தொடர்பாக ஏற்பட்டுள்ள உடன்பாட்டில் இரு பிரிவுகளில் திருத்தம் கொண்டுவருது.

மூன்றாவது, தூர்தர்ஷன் மற்றும் நேபாள அரசின் தொலைக்காட்சி நிறுவனம் இடையேயான பரிமாற்றம் குறித்த ஒப்பந்தமாகும்.

இந்த மூன்று ஒப்பந்தங்களிலும் இருநாட்டு தலைவர்கள் கையெழுத்திட்டனர். மேலும் நேபாள நாட்டிற்கு இந்தியா ரூ.6300 கோடி கடன் உதவி செய்யும் என்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய மோடி தெரிவித்தார்.

Leave a Reply