இந்தியாவில் முடியாததை அபுதாபியில் செய்யும் பிரதமர் மோடி
கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெற்றதே ராமர் கோவில் பிரச்சனையை வைத்துதான் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்று முழக்கமிட்டே வாக்குகளை குவித்த பாஜக மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியும் இன்னும் ராமர் கோவில் கட்டவும் இல்லை, அந்த பிரச்சனை தீரவும் இல்லை
இந்த நிலையில் இன்று அபுதாபியில் பிரதமர் நரேந்திர மோடி முதல் இந்து கற்கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டினார். ராமர் கோவில் என்று கூறப்படும் இந்த கோவில் அபுதாபி நகரில் அமைய உள்ள கல்லால் ஆன முதல் இந்து கோவில் ஆகும். இது 55 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படுகிறது. 2020ம் ஆண்டில் கோவில் முழுமை பெறும். அனைத்து மத பின்னணி கொண்டவர்களும் இங்கு செல்லலாம்.