பயங்கரவாதிகளில் பட்டியலில் மோடி, பிரபாகரன் புகைப்படங்கள். கேரள கல்லூரி முதல்வர் மீது வழக்கு.

negative-faces-kuzhoor விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் மோடி ஆகியோர்களின் புகைபடங்களை நெகட்டிவ் பேலஸ் என்ற பெயரில் குற்றவாளிகளின் புகைப்படத்துடன் அச்சிட்டு சிறப்பு மலர்  வெளியிட்ட கேரள கல்லூரி முதல்வர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளவில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு பாலிடெக்னிக் சார்பில் சிறப்பு மலர் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. இந்த மலரில் பயங்கர குற்றவாளிகளின் புகைப்படங்கள் என்ற பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் சந்தனக்கடத்தல் வீரப்பன், ஹிட்லர், பாகிஸ்தான்பயங்கரவாதி அஜ்மல் கசாப், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், அல்கொய்தா தலைவர்ஒசாமா பின்லேடன் ஆகியோரது புகைப்படங்களும் வெளியாகியிருந்தது.

இதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததோடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் உள்பட சிறப்பு மலர் தயாரித்த 7 பேர் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் புகைப்படம் இடம்பெற்றிருப்பதால் தமிழக அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1ocLcwL” standard=”http://www.youtube.com/v/7NN9DecNukA?fs=1″ vars=”ytid=7NN9DecNukA&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep3948″ /]

Leave a Reply