இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திரமோடி தனது பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்ததன் மூலம் ஆசிய அளவில் ஒரு பலமான அணியை ஏற்படுத்தி மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு சவாலை ஏற்படுத்த ஆரம்பகட்ட பணியை செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தனக்கு விசா கொடுக்காமல் தன்னை அவமானப்படுத்திய அமெரிக்காவை பழிதீர்க்க, ஆசிய அளவில் ஒரு மிகப்பெரிய அணியை உருவாக்கி அமெரிக்காவுக்கு பொருளாதார ரீதியிலும், ராணுவ ரீதியிலும் நெருக்கடி கொடுப்பதே பிரதமரின் மெகா திட்டம் என்று கூறப்படுகிறது.
இதற்காகத்தான் முதல்கட்டமாக பகைமை நாடுகளாக இதுவரை இருந்துவந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை உள்பட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுவித்து அனைத்து நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துள்ளார். இதை மிகச்சரியாக புரிந்து கொண்ட அமெரிக்காவில் பொருளாதார எதிரியான சீனா, தற்போது இந்தியாவுடன் இணக்கமான உறவை மேம்படுத்த முடிவு செய்துள்ளது.
இன்று சுமார் அரைமணிநேரம் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசிய சீன பிரதமர் லீ கீகியாங், இருநாட்டு நல்லுறவு, பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவு குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் சீனாவிற்கு வருகைதரும்படி முறையான அழைப்பையும் விடுத்திருக்கின்றார். இதையெல்லாம் அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியா,சீனா,ஜப்பான் போன்ற ஆசிய அளவில் வலிமையாக உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்தால் அமெரிக்காவை எதிர்ப்பது மிக சுலபம் என்ற கணக்கில் காய்நகர்த்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா சற்று அதிர்ச்சியடைந்துள்ளது என்பதே உண்மை என்கிறது அரசியல் வட்டாரங்கள்.