மோடியின் 10 அம்ச திட்டம் இந்தியாவை வல்லரசாக்க உதவும். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கருத்து

modi 10

பிரதமர் பதவியேற்றவுடன் இரண்டாவது முறையாக நேற்று அமைச்சரவையை கூட்டிய ந்ரேந்திரமோடி, ஆட்சியை செம்மையாக நடத்துவதற்குரிய 10 அம்ச திட்டத்தை அறிவித்தார். தனது 10 அம்ச திட்டத்தை அமைச்சர்கள் அனைவரும் கடைபிடித்து நல்லாட்சிக்கு ஒத்துழைக்குமாறு அவர் அமைச்சர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி அறிவித்த 10 அம்ச கோரிக்கை பின்வருமாறு:

1. அதிகார வர்க்கத்திடம் நம்பிக்கை வளர்த்தல்

2. அதிகார வர்க்கத்துக்கு பணி சுதந்திரம், புதுமையான யோசனைகளுக்கு வரவேற்பு

3. அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை

4. கல்வி, சுகாதாரம், குடிநீர், எரிசக்தி, சாலை வசதிக்கு முன்னுரிமை

5. மக்கள் தொடர்புடைய திட்டங்களுக்கு முன்னுரிமை

6. உள்கட்டமைப்பு, முதலீடு சீர்திருத்தங்கள்

7. அமைச்சகங்கள் இடையேயான பிரச்சினைகளை கவனிக்க ஒரு அமைப்புமுறை

8. பொருளாதார பிரச்சினைகள் கவனிக்கப்படல்

9. குறித்த காலகட்டத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய கொள்கைகள்

10. அரசு கொள்கைகளில் ஸ்திரத்தன்மை, நிலைத்து நிற்கும் ஆற்றல்.

பிரதமர் மோடி அறிவித்துள்ள இந்த 10 அம்ச திட்டங்கள் நாடு சிறந்த பாதையில் செல்ல வழிவகுப்பதோடு , இந்தியாவை வல்லரசாக்க உதவும் என ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்

Leave a Reply